IIM அகமதாபாத்தின் MBA பட்டம், பலருக்கு பன்னாட்டு நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதற்கான நுழைவுச்சீட்டு. ஆனால், கௌஷலேந்தர குமார்க்கு அப்படி இல்லை.
இவர் ஒரு IIM அகமதாபாத் பட்டதாரி. பொதுவாக, IIM-களில் இருந்து வரும் MBA பட்டதாரிகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவி, கை நிறைய சம்பளம் என வாழ்க்கை பாதை எளிதாக அமைந்துவிடுகிறது. ஆனால், இவரோ வித்தியாசமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் இன்று ஒரு காய்கறி வியாபாரி.
படிப்பின் போது காய்கறிகள் விற்பவர்கள் பற்றி செய்த project-ஐ வைத்து, படித்து முடித்ததும் குளிரூட்டப்பட்ட தள்ளுவண்டி ஒன்றை புதிதாக வடிவமைத்தார். அத்தோடு நிறுத்திவிடாமல், தானே அதை வைத்து விற்பனையும் செய்ய ஆரம்பித்தார். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை வாங்கி, நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்தார். இடைத்தரகர்களுக்கு சென்று கொண்டிருந்த பெரிய பங்கை பகிர்ந்தளித்ததால் உற்பத்தி செய்பவர்களிடமும், வாங்குபவர்களிடமும் நல்ல வரவேற்பு.
இப்படி ஒரு நூதன யோசனையை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கும் கௌஷலேந்தர குமார் போன்றோர்தான் எனக்கு உத்வேகம் அளிக்கின்றனர்.
For my non-Tamil audience:
Mr. Kaushalendra Kumar is a social entrepreneur and one of my sources of motivation. A graduate of IIM-A, he sells vegetables. Surprising, huh? The story is here.
No comments:
Post a Comment